குன்னூர் வண்டிச்சோலை வனத்துறை நர்சரியில் தேன் கூடு கலைந்ததால் தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயமடைந்தனர். வாட்சர் தவமணி, நந்தினி மற்றும் தற்காலிக பணியாளர்கள் உஷா, சுசீலா, ரஞ்சினி, புவனேஸ்வரி ஆகியோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த தவமணி மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து குன்னூர் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.