வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் பணத்தை திருப்பி தர கேட்டும் தரவில்லை. இவர்கள் இருவர் மீது குன்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்சலாம் இதற்கான தீர்ப்பை வழங்கினார். அதில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய ரஹிம், மற்றும் ஜோகி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் பணம் வாங்கியவர்களுக்கு மொத்தம் 26 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை 3 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என குன்னூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்