நேற்றைய தினம் (ஜூலை 4) மாலை வேளையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்த கரடி அச்சத்தில் பொதுமக்கள் அங்குமிங்கும் ஓடி சத்தமிட்டு குடங்களை வைத்து தட்டி காட்டுக்குள் விரட்டியடித்துள்ளனர்.
இது குறித்து அப்போது மக்கள் கூறுகையில் காடுகள் சுருக்கப்பட்டதால் அவை உண்ண உணவின்றி பழமரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களும் கம்பி வேலிகளும் போடப்பட்டு அவை எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதாகவும், இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான வனத்தினை ஏற்பாடு செய்து உணவு தண்ணீரை ஏற்படுத்த வனத்துறையினர் முற்பட வேண்டும் என்றும் மேலும் இவ்வாறு ஊருக்குள் குடியிருப்புக்குள் நுழையும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.