இந்த நிலையில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு புதுமந்து பகுதியில் கரடி ஒன்று தொடர்ச்சியாக உலாவருகிறது. வீட்டு கதவை மனிதர்கள் போல் நின்று கொண்டு தள்ளி உடைக்கும் காட்சிகளும், பேக்கரி மற்றும் ஓட்டல்களில் நுழைந்து பொருட்களை சேதம் செய்யும் காட்சிகளும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக கரடி அந்த பகுதியில் உலா வருவதால் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக குடியிருப்புப் பகுதி நுழைந்து பொதுமக்களை பீதியில் ஆழ்த்தும் கரடியை கூண்டு பிடித்து வனப்பகுதிக்குள் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை விமான நிலைய உயர்வு: பழனிசாமி நன்றி