கூடலூர்: பாறைகளின் இடுக்கில் சிக்கி இளைஞர் பரிதாப பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை காட்சி முனைக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாகீர் (23) மற்றும் அவரது நண்பருடன் ஊசிமலை காட்சி முனை பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் இருவரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடு கட்டி இருந்த தேனீக்கள் இருவரையும் கொட்டியுள்ளன. 

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் படுகாயம் அடைந்த ஜாகீர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாறை இடுக்குகளுக்கு இடையில் மயக்கம் அடைந்த அவரை வனத்துறையினர் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது நண்பர் லேசான காயங்களுடன் கேரள மாநிலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நடுவட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனீக்கள் கொட்டி சுற்றுலாவிற்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி