நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மதுப்பிரியர்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அருகில் பள்ளிவாசல், கோயில்களுக்குச் செல்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் போதையாசாமிகள் அங்கேயே சீறுநீர் கழிப்பதும் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும், சண்டையிடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே நேற்று நகராட்சியில் நடைபெற்ற நகரமன்றக் கூட்டத்தில் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற சிறப்புக் கவனஈர்ப்பு தீர்மானமாக நகரமன்றத் துணைத் தலைவர் வாசிம்ராஜா கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர்.