நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் நேற்று (மே 14) நள்ளிரவில் கருஞ்சிறுத்தை உலா வந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடுகள் அருகே சுதந்திரமாக சுற்றித்திரிந்த சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.