நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வன விலங்குகள் அட்டகாசம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக கரடி கருஞ்சிறுத்தை புலி போன்றவை இரவு மற்றும் பகல் வேலைகளில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள காக்கா சோலை பகுதியில் ஒரு மாத காலமாக கரடி சுற்றித் திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் எனவே ஊருக்குள் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றுஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.