சாரல் மழை காரணமாக ஓய்வெடுத்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. குன்னூர் அருகே உள்ள கரிமரா கிராமத்தில் ராஜீ என்பவரின் வீட்டில் மேற்பகுதியில் கரடி சாரல் மழையின் காரணமாக சற்று நேரம் ஓய்வெடுத்து சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்கில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி