கோவை: கஞ்சா வியாபாரிகளுக்கு உதவிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேசன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிப்பட்டது. போலீஸ் காவலில் இருந்த கஞ்சா வியாபாரிகளிடம் 2, 000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, பணியில் இருந்த போலீசாரே செல்போனை கொடுத்து உதவியது தெரிய வந்தது. மேலும், கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து போலீசார் இருவரும் G-Pay மூலம் பணம் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை கோவை துணை ஆணையர் சரவணக்குமார் இன்று(அக்.30) மேற்கொண்டார். இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே குற்றவாளிகளுக்கு உதவி செய்திருப்பது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி