கோவை: சாலையில் தவறி விழுந்து கர்ப்பிணி பலி

கோவை பிரஸ் காலனியை அடுத்த சாந்திமேடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் விமல்பாபு, இவர் கூலி தொழிலாளி. இவரது மகள் மோகனப்பிரியா (வயது 19), திருமணம் முடிந்து 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் திலீப் (33) என்பவர் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் பலகாரக்கடை நடத்தி வந்தார். 

தினமும் திலீப், தனது இருசக்கர வாகனத்தில் மோகனப்பிரியாவை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 27-ஆம் தேதி, பிரஸ் காலனி கேட் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோகனப்பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றாலும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி