இதனையடுத்து அவரது மனைவி ஒலினா நேற்று கோவை வந்தார். கணவர் தங்கியிருக்கும் லாட்ஜூக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அவருடன் வேறு ஒரு பெண்ணும் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுதீசுக்கும், ஒலினாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சுதீசுடன் தங்கியிருந்த பெண் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒலினாவும், லாட்ஜில் இருந்து வெளியேறினார். இதனால் மனவேதனை அடைந்த சுதீஷ் லாட்ஜில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.