கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகள் கனகவள்ளி (19). இவர் கோவை பி. என். பாளையம் நேதாஜி நகரில் அவரது சகோதரி பிரியதர்ஷினி உடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கனகவள்ளி நேற்று (அக்.,4) மாலை அவர் தங்கி இருந்த அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி