கோவை மசக்காளிபாளையம் ரோடு, ஏ. கே. ஜி. நகரை சேர்ந்த கருணாநிதி (41) என்பவர் நேற்று (டிசம்பர் 27) மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மது போதையில் வாகனம் ஓட்டி வந்த சதீஷ்குமார் என்பவரின் கார் மோதியதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.