கோவை: ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்- தொழிலாளி கைது

கோவை பிரஸ் காலனியை அடுத்த பாலாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 61) ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று (ஜன.2) சவாரி முடித்துவிட்டு வீரபாண்டி ரோட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு சாலையின் குறுக்கே குடிநீர் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

அதனை அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அப்போது அங்கு வந்த தொழிலாளி தனுஷ் (24) என்பவர், ரவியிடம் தகராறு செய்து கல்லை எடுத்து ரவியின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் படுகாயம் அடைந்த ரவி மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி