கோவை: விபச்சார புரோக்கர்கள் 3 பேர் கைது

கோவை காந்திபுரம் சாஸ்திரி நகர் 2வது வீதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று (செப்.,30) போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு, அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்த முகமத் இமான் அலி(30), ரத்தினபுரியை சேர்ந்த அசோக்(26) மற்றும் ஆர்எஸ் புரத்தை சேர்ந்த மதன் கண்ணன்(34) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி