இவருக்கும் இவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகியோருடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ராம்குமார் நின்றிருந்த போது அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி கணவர் அங்கு வந்தனர். அப்போது திடீரென கண்டக்டர் ராம்குமாரை அவர்கள் தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதில் அவர் காயமடைந்தார். இது குறித்து ராம்குமார் நேற்று காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி, பாப்பநாயக்கன்பாளையம், காட்டூர் உத்தரவை சேர்ந்த வீராசாமி (37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.