கோவை: பட்டா வழங்கியும் இடம் தராத அதிகாரிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. 

2016 ஆம் ஆண்டு 25 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு 60க்கும் மேற்பட்டவர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவை மட்டும் வழங்கிவிட்டு, அவர்களுக்கான இடத்தை தேர்வு செய்து வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர். பட்டா பெற்ற பயனாளிகள் பலமுறை மாவட்ட அளவில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மனு கொடுத்து அலைந்தும், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 

இதனை கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்த மாத இறுதிக்குள் பட்டா கொடுக்கப்பட்டவர்களுக்கு உரிய இடத்தை காட்டவில்லை என்றால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி