கர்நாடகா: கப்பல் கட்டுமானம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித் (29) மற்றும் சான்ட்ரி (37) ஆகிய இருவரை உடுப்பி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கப்பல் கட்டும் தளங்களில் பணிபுரிந்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் கப்பல் விவரங்கள், எண்கள் போன்றவற்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் உட்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் என காவல்துறை தெரிவித்துள்ளது.