அதிமுகவின் நீலகிரி மாவட்ட துணைச் செயலாளராகவும், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த கோபாலகிருஷ்ணன் இன்று (மே.13) தவெகவில் இணைந்தார். மேலும் அவரது தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த உதகை நகர மன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.