ஹாங்காங் சிக்ஸ் தொடரில் சிக்ஸர் மழை பொழிந்த நிலான்ஸ் கேஸ்வானி

ஹாங்காங் சிக்ஸ் தொடரில் நேற்று நடைபெற்ற நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் UAE அணி வீரர் நிலான்ஸ் கேஸ்வானி சிக்ஸர் மழை பொழிந்தார். மொத்தம் 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 சிக்ஸர், 3 பவுண்டரிகள் பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். அவர் எதிகொண்ட பந்துகளில் 6 4 6 0 6 4 6 6 6 6 6 6 4 6 W ரன்கள் விளாசி, 10 பந்துகளில் அரைசதம் கடந்தார். இப்போட்டியில் UAE அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நன்றி:FANCODE

தொடர்புடைய செய்தி