2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரேசில் அணியில், நட்சத்திர வீரர் நெய்மர் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் காயங்கள் காரணமாக நெய்மரின் பங்கேற்பு கேள்விக்குறியாக இருந்த நிலையில், அவரது உடல் தகுதியையும் சமீபத்திய சிறப்பான ஆட்டத்தையும் கருத்தில் கொண்டு, பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி அவரை 26 பேர் கொண்ட அணியில் சேர்த்துள்ளார்.