பிரபல தமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியவதனா (24) இன்று காலமானார். அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் சில சமூக ஊடகங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பிரியவதனா பதிவிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. முதலமைச்சர் விஜய் கோவையில் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம் குறித்து அதில் பேசியுள்ளார்.