ம.பி: இந்தூரைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ராஜா ரகுவன்ஷி (30) சோனம் (27) ஆகிய இருவரும் தேனிலவு கொண்டாட மேகாலயா சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜாவின் உடல் பாதி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி சோனம் காணாமல் போயுள்ளார். ராஜாவின் நகை மற்றும் பர்ஸ் காணவில்லை என்பதால் கொள்ளை சம்பவத்தின்போது இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.