புதுமணப்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.. கதறும் பெற்றோர்

திருவள்ளூர் மாவட்டம் அத்திவாக்கத்தில் திருமணம் முடிந்த 5 மாதங்களில் கௌசல்யா (20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கீழே விழுந்ததில் கௌசல்யாவுக்கு தலையில் அடிப்பட்டு உயிரிழந்துவிட்டதாக கணவர் ராஜேஷ் (30) கூறியுள்ளார். இந்த நிலையில், தலை, முகத்தில் காயங்கள் இருப்பதால் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி