கார் தீப்பிடித்து எரிந்து புதுமாப்பிள்ளை பலி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இன்று (நவ., 09) இந்த கோர விபத்தில் காரை ஓட்டிவந்த ரபீக் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் ரபீக் திருவாரூரைச் சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி 5 மாதங்களே ஆன இவர், புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி