திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் - நிவேதா தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. சம்பவத்தன்று, தங்களது உறவினர் ஊருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது பைக் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த நிவேதா, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவர் ராஜசேகர் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.