வெள்ளத்தில் சிக்கிய நபரை துப்பட்டா மூலம் மீட்ட புதுமண ஜோடி

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை, புதுமண தம்பதியினர் தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர். அந்த தம்பதியினர் காரில் சென்றபோது பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கியவரை நோக்கி, துப்பட்டாவை கயிறு போல் கட்டி வீசியுள்ளனர். அதைப் பிடித்து கொண்ட அந்த நபரை அந்த ஜோடி ஒன்று சேர்ந்து பாதுகாப்பாக கரைக்கு இழுத்து மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி:NDTV

தொடர்புடைய செய்தி