நியூசிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றுள்ளது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ரோமாரியோ ஷெப்பர்டு 49 ரன்களும், ஷமர் ஸ்பிரிங்கர் 39 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஈஷ் சோதி மற்றும் ஜேக்கோப் டஃபி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.