நியூசிலாந்து-இலங்கை கொழும்பில் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், இன்று (பிப்., 25) இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் குரூப் 2 பிரிவில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை, அரையிறுதிக்கு முன்னேற இன்று நியூசிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  இரு அணிகளும் டி20யில் இதற்கு முன் 28 முறை மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 16 முறையும், இலங்கை 11 முறையும் வென்றுள்ளன. இங்கிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி