பீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்தை மாற்றும் வகையில், அமெரிக்க ஆய்வாளர் கிறிஸ் பக் பீரை அடிப்படையாக கொண்ட புதிய தடுப்பூசி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைப்பதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் முயற்சியில் அவர் வெற்றி கண்டுள்ளார். இந்த பீரை உட்கொண்டவர்களுக்கு உடலில் ஆன்டிபாடீஸ் உருவானது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது