கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யூபிஐ செயலிகளில் நாளை (டிச.31) முதல் புதிய மாற்றங்களை என்பிசிஐ (NPCI) அமல்படுத்துகிறது. இதன்படி, மாத சந்தா மற்றும் எஸ்ஐபி (SIP) முதலீடுகளுக்கான 'ஆட்டோ பே' வசதியை, ஒரு செயலியிலிருந்து மற்றொரு செயலிக்கு 90 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாகிறது. மேலும், பயனர்கள் தங்களின் அனைத்து ஆட்டோ பே பரிவர்த்தனைகளையும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வந்து எளிதாக நிர்வகிக்க முடியும்.