தமிழகத்தில் ஒட்டுண்ணியால் ஏற்படும் 'Scrub Typhus' என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. விவசாயிகள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், நெறிக்கட்டிக்கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கவனிக்காமல் விட்டால் நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.