தொகுதிப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய நபரைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர், தான் மது அருந்தியிருந்ததாகப் பரவும் தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், சம்பவத்தின்போது துணை சபாநாயகர்தான் மது போதையில் இருந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.