இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக ஆக.1 முதல் புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்படி ஏசி வகுப்புகளுக்கு காலை 8:30 முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 9:00 முதல் 9:30 மணி வரையிலும் டோக்கன்கள் வழங்கப்படும். மையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைக்கவும், பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தி முன்பதிவு முறையை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.