மாணவர்களின் பாதுகாப்பிற்குப் புதிய தொழில்நுட்பம்

பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்கும் நோக்கில், கூடுதல் எடை விழுந்தால் தானாகவே கீழே இறங்கும் நவீன மின்விசிறிகள் குஜராத்தில் பொருத்தப்படுகின்றன. முதற்கட்டமாக, சூரத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் சுமார் 388 மின்விசிறிகள் இந்த முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிரைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕