தமிழக பாஜக சக்தி கேந்திராவுக்கான பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா சேலம் வரும் நிலையில், வரும் 14ம் தேதி அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாக 25,000 பேர் உள்ளனர். 3 அல்லது 4 பூத்களில் உள்ள பாஜக தொண்டர்களை நிர்வகிக்க பாஜகவில் உள்ள அமைப்பு சக்தி கேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நியூஸ் 18