எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு தேவையற்ற செலவுகளையும், அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்குமாறு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கூட்டங்களை முடிந்தவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் லாக்டவுன் போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.