புதிய பி.யு. கல்லூரிகளுக்கு மூன்றாண்டுகளுக்குத் தடை

கர்நாடக மாநிலத்தில் 2027-28 முதல் 2029-30 வரையிலான மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய தனியார் பி.யு. கல்லூரிகளைத் தொடங்க தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள பி.யு. கல்லூரிகளில் பெருமளவில் இடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, விரிவுரையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கல்வித்துறை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕