நெல் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் விவசாயிகள் புதிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800-599-3540 என்ற எண்ணை அழைக்கலாம். அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 1967 அல்லது 1800-425-5901 கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tnpds.gov.in இணையதளம் வழியாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.