தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், இது பொய் என்றும், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பங்களிப்புத் தொகை, அரசின் பங்கு, வட்டி மட்டுமே வழங்கப்படுவதாகவும், இது கொத்தடிமைப்படுத்தும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.