அதிமுக, பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று (நவ., 09) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகின்றன. எனவே எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. திமுக வேண்டாம் என நினைக்கும் கட்சிகள் இணைந்து, ஆட்சியை வீழ்த்தும் நிலை வரும் மாதங்களில் உருவாகும்' என்று தெரிவித்தார்.