“அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவுள்ளன” - ராஜேந்திர பாலாஜி

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. இதில், தவெக உடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் இதுவரை இணையவில்லை. நாதக தனித்தே போட்டி என அறிவித்துவிட்டது. இந்நிலையில், இன்று (நவ.13) பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஜனவரி மாதம் முதல் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவுள்ளன. அதிமுக-வுக்கு பல புதிய கட்சிகள் ஆதரவு தர உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி