HMD நிறுவனம் புதிய Nokia 2360 Flip மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. கிளாம்ஷெல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில் Family Assist என்ற சிறப்பு வசதியும் இடம்பெற்றுள்ளது. இதில் 2.8 இன்ச் மெயின் டிஸ்பிளே, 1,450mAh பேட்டரி, QVGA கேமரா மற்றும் 4MB உள்நிலை சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், Burgundy Red, Charcoal, Teal ஆகிய 3 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. எளிமையான பயன்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.