அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், அடிப்படை காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படும். குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்படும். அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதிவி அளிக்கப்படும். 2,992 சிகிச்சைகள் மற்றும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படும். இதற்காக ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி