வங்கக் கடலில் நவ.22-இல் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் வரும் நவ.22-ஆம் தேதி உருவாகும் இந்த புதிய தாழ்வு பகுதி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி