தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று (நவ., 20) காலை 10 மணி வரை செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், கன்னியாகுமரி, நெல்லை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.