ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி வளாகம் திறப்பு

தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 19.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை முதலமைச்சர் விஜய் நேற்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 80,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் மின்னணு ஏல முறை, விவசாயிகள் மற்றும் நூல் உற்பத்தியாளர்களுக்கான நவீன அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் பட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் இந்த புதிய கட்டமைப்பு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕