சென்னை கேப்பிட்டல் ஹோண்டா டீலர்ஷிப்பில் புதிய ஹோண்டா கார் அறிமுகப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம், ஆடம்பரமான உட்புற வடிவமைப்பு, மேம்பட்ட இன்போடெயின்மென்ட் வசதிகள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட இந்த கார், வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்கிறது. ஸ்டைல், வசதி, தொழில்நுட்பம் மற்றும் நம்பகத்தன்மையின் கலவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் தேசிய டென்னிஸ் வீரர் அஜய் செல்வராஜ், பாடகர் சாய் சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.