சென்னை போன்ற மாநகராட்சிகளை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் (பெல்ட் ஏரியா) இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது தொடர்பாக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கும் இடம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.